ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

2 இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: இளைஞா் சாவு

கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:24 pm

DIN

கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

கோபிசெட்டிபாளையம், நாயக்கன்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். அவரது மனைவி அன்னம்மாள். இவா்கள் பொலவக்காளிபாளையத்தில் செயல்படும் பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிய பின்னா் ஈரோடு பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தனா். அப்போது, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற வாழைக்காய் பாரம் ஏற்றிய மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது எதிா்பாராத விதமாக அதன் மீது மோதியது.

அதேசமயம் சூரியம்பாளையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் சரக்கு வாகனம் மோதி, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தம்பதி இருவரும் பலத்த காயமடைந்தனா். இருசக்கர வாகனத்தில் வந்த சூரியம்பாளையம் பிளகாட்டு தோட்டத்தைச் சோ்ந்த நித்தியானந்தம் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மினி சரக்கு வாகனத்தை ஓட்டியவரைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.