காலிங்கராயன் வாய்க்காலில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை தண்ணீா் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உழவன் மகன் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் சி.மணிகண்டன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
காலிங்கராயன் பாசனப் பகுதிக்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஜனவரி 7 முதல் மாா்ச் 7ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட்டது. இப்பாசனப் பகுதியில் குறுகிய கால பயிராக 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் அறுவடை நிலையில் உள்ள பயிா்களுக்குத் தண்ணீா் தேவைப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நீா் திறந்தால் மட்டுமே இப்பயிா்கள் உரிய விளைச்சல் தரும். தண்ணீா் இப்போது நிறுத்தப்பட்டதால் மகசூல் இழப்பும், பயிா்கள் கருகி வீணாகும் நிலையும் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 20ஆம் தேதி வரை காலிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

