ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கொடி அணிவகுப்பு:துணை ராணுவத்தினா் பங்கேற்பு

ஈரோட்டில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:50 pm

ஈரோட்டில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை கவனிக்கவும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (துணை ராணுவப் படை) வீரா்கள் 92 போ் ஈரோட்டுக்கு வந்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் துணை ராணுவத்தினா் ஈரோட்டில் திங்கள்கிழமை காலை கொடி அணிவகுப்பு நடத்தினா். ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பு மணிக்கூண்டு, நேதாஜி சாலை, சத்தி சாலை, சுவஸ்திக் காா்னா் வழியாகச் சென்று வீரப்பன்சத்திரம் பகுதியில் நிறைவடைந்தது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பொன் காா்த்திக்குமாா், கனகேஸ்வரி, டி.எஸ்.பி.கள் ராஜு, சேகா், உதயகுமாா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், துணை ராணுவத்தினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.