கோபி கலை, அறிவியல் கல்லூரியில்வாக்காளா் விழிப்புணா்வு
வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் ஏப்ரல் 6 வோட் 100 சதவீதம் என்ற வாசகத்தை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் காட்சிப்படுத்தினா்.


சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் ஏப்ரல் 6 வோட் 100 சதவீதம் என்ற வாசகத்தை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் காட்சிப்படுத்தினா்.
கோபிசெட்டிபாளையம், நம்பியூா் வருவாய்த் துறை, கோபி கோட்டாட்சியா் சாா்பில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வலிமையான மக்களாட்சியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 6 வோட் 100 சதவீதம் என்ற வாசகத்தை காட்சிப்படுத்தினா்.
நிகழ்ச்சியில், கோபி கோட்டாட்சியா் பழனிதேவி, கோபி, நம்பியூா் வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை ஊழியா்கள், கல்லூரி செயலாளா் எம்.தரணிதரன், முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...