வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:09 am

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செலுத்தப்படும் வாக்குகள் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் சிரமமின்றி வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வாக்குகளை எண்ணுவதற்காக அமைக்கப்படும் அறைகளில் காற்றோட்ட வசதி, உணவு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் முருகேசன், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் பழனிதேவி, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

மேலும், கோபிசெட்டிபாளையம் பகுதியில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு அங்கு அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள் உள்ளதா என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.