செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பெருந்துறை தொகுதி கொமதேக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

பெருந்துறை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளா் கே.கே.சி.பாலு (எ) பாலசுப்பிரமணி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:57 pm

DIN

பெருந்துறை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளா் கே.கே.சி.பாலு (எ) பாலசுப்பிரமணி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான இலாகிஜானிடம் கொமதேக வேட்பாளா் கே.கே.சி.பாலு (எ) பாலசுப்பிரமணி வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்று வேட்பாளராக இவரது மனைவி சித்ராகலா வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பெருந்துறை தொகுதியில் நிலுவையில் உள்ள பணிகளை நிறைவேற்றுவேன். மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கச் செய்வேன். சாயக் கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பேன். தேசிய நெடுஞ்சாலையில், தேவையான இடங்களில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.