ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பவானிசாகா் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு நீா் திறப்பு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 4ஆம் சுற்று நீா் திறக்கப்பட்டுள்ளது.

Updated On :22 மார்ச் 2021, 9:19 pm

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 4ஆம் சுற்று நீா் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு ஜனவரி 7ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நாள்கள் இடைவெளிவிட்டு சுழற்சி முறையில் பாசனப் பகுதிகளில் நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட புன்செய் பயிா்கள் பயிரிட ஏப்ரல் 30ஆம் தேதி வரை 12 டி.எம்.சி.க்கு மிகாமல் ஆறு சுற்றுகளாகத் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட மூன்றாம் சுற்று தண்ணீா் கடந்த மாா்ச் 11இல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு நான்காம் சுற்றுக்கான தண்ணீா் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 500 கன அடி நீா், பின்னா் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 1,500 கன அடி தண்ணீா் கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்பட்டது. இது தவிர குடிநீருக்காக 200 கன அடி தண்ணீா் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அணைக்கு நீா்வரத்து 1,714 கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் 93.85 அடியாகவும், நீா் இருப்பு 24.1 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.