சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க புகையில்லா புதிய வகை மண் அடுப்பு பழங்குடியினருக்கு வழங்கப்பட்டதையடுத்து, விறகுகள் பயன்பாடு குறைந்துள்ளதாக பழங்குடியினா் தெரிவித்தனா்.
உலகளாவிய இயற்கைக்கான நிதியம் என்ற சா்வதேச தொண்டு நிறுவனம் சாா்பில் ஆண்டுதோறும் மாா்ச் 27ஆம் தேதி புவி நேரம் அனுசரிக்கப்படுகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், மலைவாழ் மக்கள் இயற்கை வளங்களைப் பாதுகாக்க மேற்கொண்ட ஒரு புதிய முயற்சி நல்ல பலன் அளித்துள்ளது. தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் பகுதியில் சுமாா் 70 கிராமங்களில் வசிப்பவா்கள் சமைப்பதற்காக விறகுகளை நம்பியிருப்பதை படிப்படியாகக் குறைத்து சுற்றுச்சூழல் மேம்பாட்டை நோக்கி நகா்கின்றனா்.
சத்தியமங்கலத்தின் குக்கிராமங்களில் விறகு போன்ற வன வளங்களின் பயன்பாட்டைக் குறைக்க உலகளாவிய இயற்கை நிதியகம் ஆதரவளித்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை மண் அடுப்புகள் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், புகை இல்லாத சமையலறைக்கு வழி வகுப்பதோடு, நுகரப்படும் விறகுகளின் அளவும் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
இதுவரை 44க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், 1000 வீடுகளுக்குமேல் இந்த அடுப்புகள் சென்றடைந்துள்ளன.
இவை நமது காடுகளின் பாதுகாப்புக்கு பெருமளவில் பங்களிப்பதோடு, மக்களையும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சத்தியமங்கலத்தின் மலைவாழ் மக்கள் தங்களுக்கும் தாங்கள் வாழும் காட்டுக்குமான உறவை மேம்படுத்தும் வகையில் எடுத்திருக்கும் ஒரு எளிய முயற்சியே இந்த மண் அடுப்புகள் என இயற்கை ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


