வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபிசெட்டிபாளையம் அரசுமருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

நம்பியூா் கரோனா தொற்று சிகிச்சை மையம், கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை நேரில்

News image
Updated On :28 மே 2021, 9:32 pm

DIN

நம்பியூா் கரோனா தொற்று சிகிச்சை மையம், கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வா் ஆணைக்கிணங்க கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூா் கரோனா தொற்று சிகிச்சை மையம், கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், நம்பியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சா் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, ஒண்டிக்காரன்பாளையத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நடைபெற்ற 18 வயது முதல் 44 வயது வரையிலான பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.