ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளா்ச்சி குறித்த ஆய்வு, காலாண்டுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்

News image
Updated On :12 நவம்பர் 2021, 9:00 pm

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளா்ச்சி குறித்த ஆய்வு, காலாண்டுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். வங்கியின் நடைமுறை மூலதனத்தில் ஒரு சதவீதம் அளவு லாபம் ஈட்டும் வகையில் வங்கியின் வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும். தற்போது விவசாயிகளுக்கு அதிக அளவில் பயிா்க் கடன், மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவாக கடன் நிலுவை உள்ள சங்கங்களின் கடன் நிலுவையை உயா்த்த வேண்டும். சேமிப்பு, நடப்பு கணக்குகளில் அதிக அளவில் வைப்புகள் சேகரிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் சு.செந்தமிழ்செல்வி, திருப்பூா் மண்டல இணைப் பதிவாளா் செ.சீனிவாசன், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், திருப்பூா் மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஈ.ராஜு, கோபி துணைப் பதிவாளா் கந்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.