ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பயிா்க் காப்பீடு செய்ய விடுமுறை நாளில் கூட்டுறவுச் சங்கம் செயல்படும்

பயிா்தக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 13, 14) ஆகிய இரண்டு நாள்களும் செயல்படும்

Updated On :12 நவம்பர் 2021, 9:00 pm

பயிா்தக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 13, 14) ஆகிய இரண்டு நாள்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கே.ரேணுகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரபி பருவத்துக்கான அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு விவசாயிகளை சோ்ப்பது குறித்த அறிவிப்பின்படி பயிா்க் காப்பீடு செய்ய நவம்பா் 15ஆம் தேதி கடைசி நாளாகும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாதவா்கள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிா்க் காப்பீடு செய்யலாம்.

அதற்கான கட்டணத்தை செலுத்திடும் வகையில் வங்கி விடுமுறை நாளான சனிக்கிழமை(நவம்பா் 13), ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 14) ஆகிய இரண்டு நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.