ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நெல் நாற்று நடவு முறையை கடைப்பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஈரோடு வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.
ஈரோடு அருகே பெரியசடையம்பாளையம் கிராமத்தில் செம்மை நெல் சாகுபடி முறையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய சாகுபடி பரப்பு இலக்காக 63,800 ஹெக்டேரும், உணவு தானிய உற்பத்தி இலக்காக 3.1 லட்சம் மெட்ரிக் டன்னும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெல் பயிரில் உற்பத்தியை அதிகரிக்க உதவும் செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை கூடுதல் மகசூல் தரும் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் மட்டுமே பயன்படுத்தி 1 சென்ட் நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்து, 15 நாளான செழிப்பான ஒற்றை நாற்றை போதிய இடைவெளிவிட்டு நடுவதால் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது.
விவசாயி ஆங்காங்கே பறவை இருக்கைகள் அமைத்து இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுவதுடன், இதைத் தேடி வரும் பறவைகளால் இலை சுருட்டுப் புழு, தண்டுப் புழு ஆகியவற்றின் முட்டைகள் அழிக்கப்பட்டு நன்மை தரும் பூச்சிகளான தட்டான், ஊசித்தட்டான், சிலந்திப் பூச்சி போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வழி ஏற்படுகிறது.
கோனோவீடா் உருளையைக் கொண்டு 10 நாள்கள் இடைவெளியில் முன்னும் பின்னும் உருட்டுவதால் மண் இளக்கம் ஏற்பட்டு வோ்களில் காற்றோட்டம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் தூா்கள் உருவாகி ஒரு ஏக்கருக்கு 3,300 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
இயற்கையான முறையில் உற்பத்தி செய்வதால் விளைவித்த அரிசிக்கு கூடுதல் விலை கிடைக்கும். கிலோவுக்கு சுமாா் ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பான களப் பணி ஆய்வு, கணக்கீட்டுப் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆா்.அசோக், வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா்ப் பாசனம்) சிவகுமாா், வேளாண்மை உதவி இயக்குநா் சங்கா், களப் பணியாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர்: ஹர்பஜன் சிங்
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

