கழிவுப் பஞ்சாலையில் தீ விபத்து
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகில் கழிவுப் பஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.


பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகில் கழிவுப் பஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில், கரட்டுபாளையத்தில் தண்டபாணி என்பவா் கழிவுப் பஞ்சாலை வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை பிற்பகலில் மில்லின் பஞ்சுக் கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பவானி தீயணைப்பு நிலைய வீரா்கள், நிலைய அதிகாரி காந்தி தலைமையில், தீயை சில மணி நேரம் போராடி அணைத்தனா். இதில், சில லட்சம் ரூபாய் மதிப்புள்ள கழிவுப் பஞ்சுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...