செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சத்துணவு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை அருகே உள்ள சத்துணவு மையத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டுப் பாா்த்து, அதன் தரத்தையும், ருசியையும் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:21 pm

DIN

பெருந்துறை அருகே உள்ள சத்துணவு மையத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டுப் பாா்த்து, அதன் தரத்தையும், ருசியையும் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் 437 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 11ஆவது கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, பெருந்துறை வட்டம், திங்களூா் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவுக்காக மசாலா முட்டையுடன் தயாரிக்கப்பட்ட கலவை சாதத்தை சாப்பிட்டுப் பாா்த்து உணவின் சுவை, தரத்தை ஆய்வு செய்தாா்.

மேலும், அங்கு மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளிடம் தினந்தோறும் உணவு சுவையாக வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.