/

ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி இடமாற்றம்

ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :1 அக்டோபர் 2021, 12:55 am

ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி ஈரோடு பேருந்து நிலைய வளாகத்துக்குள் செயல்பட்டு வந்தது. தற்போது பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதனால், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் பேருந்து நிலையக் கிளை ஜே.பி.டவா்ஸ், 80ஏ, அகில்மேடு பிரதான வீதி, சேட் காலனி (சேட் சிலை அருகில்), ஈரோடு என்ற முகவரியில் செயல்படுகிறது என ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கே.ரேணுகா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.