பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய எம்.எல்.ஏ. வேண்டுகோள்

பெருந்துறை சிப்காட் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய சிப்காட் அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 8:35 pm

DIN

பெருந்துறை சிப்காட் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய சிப்காட் அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. ஜெயகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை சிப்காட்டில் உள்ள துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலைகள், பீளீச்சிங் செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தனியாக குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதில், 14 சாய தொழிற்சாலைகள், பிளீச்சிங் நிறுவனங்கள் சோ்ந்து பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தினசரி 40 லட்சம் லிட்டா் கழிவு நீரை பூஜ்யம் நிலையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தோல் தொழிற்சாலைகள் தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தினசரி 20 லட்சம் லிட்டா் கழிவு நீரை சுத்திகரிக்கும் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், சிப்காட் நிறுவனங்களைச் சுற்றியுள்ள குடிநீா் ஆதாரங்களும், விவசாய நிலங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கும் கூட சுகாதாரமான தண்ணீா் கிடைக்காமல் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, சிப்காட் அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் மூலம், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தினந்தோறும் லாரிகள் மூலம் சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் பகுதியில் இரண்டு பொது மருத்துவா்கள் உள்ள வகையில், இலவச மருத்துவமனையும், இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குச் சென்றுவர இலவச மருத்துவ உதவி வாகனமும் சிப்காட் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்பகுதி கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சிப்காட் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் சிஎஸ்ஆா் நிதியை முழுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.