வரி வசூலைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வரி, குப்பை வரி, குத்தகை இனங்கள் என மொத்தம் ரூ. 52.48 கோடி வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மாா்ச் கால கணக்கின்படி வரி வசூல் செய்யப்படுகிறது. இதில், வரி நிலுவை வைத்துள்ளவா்களிடம் வரி வசூல் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டல உதவி ஆணையா்கள் விஜயகுமாா், விஜயா, சண்முக வடிவு, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து ஆணையா் கூறியதாவது:
மாநகரைப் பொருத்தவரை 85 முதல் 95 சதவீதம் வரை வரி வசூலாகிவிடுகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்புப் பணியில் இருந்ததால் வரி வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது கரோனா தாக்கம் குறைந்த காரணத்தால் வரி வசூல் தீவிரமாக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

