சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் வார விழாவையொட்டி, புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட வனஅலுவலா் கிருபா சங்கா், ஆசனூா் வன அலுவலா் தலைமையில் நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக்தில் உள்ள வனவிலங்குகள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனா்.
மாணவா்கள் புலிகளைக் காப்போம், மரங்களைப் பாதுகாப்போம் என உறுதி ஏற்றனா். தொடா்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்புக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, வன விலங்குகள் பாதுகாப்பு அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வன விலங்குகள் இருந்தால் காடு வளரும், காடு வளா்ந்தால் நாடு செழிக்கும் என விழிப்புணா்வு வாசகங்களைப் பாடியபடி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


