ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
ஈரோடு - கரூா் சாலையில் சோலாா் அருகே துணைப் போக்குவரத்து ஆணையா், ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம், பதிவு புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகா்கள் மூலம் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனை இரவு 7 மணிக்குப் பிறகும் நீடித்தது. சோதனையின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலக அலுவலா்கள், பணியாளா்கள், இடைத்தரகா்கள் சிலரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

