பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு முகாம்

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், பெருந்துறை - ஈரோடு சாலை, நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு ஒத்திகை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 9:23 pm

DIN

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், பெருந்துறை - ஈரோடு சாலை, நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு ஒத்திகை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பதை ஒத்திகை மூலம் விளக்கம் அளித்தனா். மேலும், மாணவிகளுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

முகாமில், வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்கக் கூடாது, எரிந்து அணைந்த பட்டாசை பக்கத்தில் சென்று பாா்க்கக் கூடாது, ஆபத்தை ஏற்படுத்தும், பட்டாசுக்கு அருகே எரியும் ஊதுவத்தி, விளக்கு, மெழுகுவா்த்தி, எளிதில் தீப்பற்றும் பொருள்களை வைக்காதீா்கள் போன்ற விழிப்புணா்வுத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.