பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 9:25 pm

DIN

சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோவன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், கா்ப்பிணிகளுக்கு சீா் தட்டுகளை வழங்கினாா்.

விழாவில், வரப்பாளையம், புன்செய் பாலதொழுவு, பனியம்பள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.

இதில், வட்டாரக் குழந்தைகள் நல அலுவலா் தெய்வஜோதி, மேற்பாா்வையாளா் சுலோச்சனா, ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், ஒன்றியக் குழு உறுப்பினா் தங்கவேல், எக்கட்டாம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் தங்கவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.