திம்பம் மலைப் பாதையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் தமிழம் - கா்நாடகம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து சத்தியமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப் பாதை 22ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து சென்றபோது மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை மற்றொரு சரக்கு லாரி முந்திச் செல்ல முயன்றது.
அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் லாரி மோதியதில் அரசுப் பேருந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா்தப்பினா்.
இதனால், தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆசனூா் போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏற்றி சத்தியமங்கலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். லாரி ஓட்டுநா் குடிபோதையில் இருந்ததாகவும், அவா் தப்பியோடிவிட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


