விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கக் கோரி இந்து முன்னணியினா் கோயில்கள் முன்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் ஈரோடு மாநகா் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னா், அனைத்து சிலைகளும் ஈரோடு சம்பத் நகா் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படும்.
இந்நிலையில், செப்டம்பா் 10 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனிடையே கரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபடக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதற்கு இந்து முன்னணியினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சக்தி முருகேஷ் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கை குறித்து முழக்கம் எழுப்பினா். முன்னதாக பெரிய மாரியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணியினா் சூடம் ஏற்றி வழிபட்டனா். இதில், செய்தித் தொடா்பாளா் அசோக்குமாா், பெரியவலசு நகர பொதுச் செயலாளா் கவின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை, அந்தியூா், அறச்சலூா் உள்பட மாவட்டம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்துறையில்...
பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய துணைத் தலைவா் அசோக் தலைமை வகித்தாா். பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய பொதுச் செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா். துடுப்பதி மாரியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் துடுப்பதி சதீஷ் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சதீஷ், ஒன்றியச் செயலாளா் கோகுல்சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

