பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறையில் 12 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியையொட்டி, பெருந்துறை ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், பெருந்துறை நகா் பகுதியில் 4 இடங்களிலும், துடுப்பதியில் ஒரு இடத்திலும், விஜயமங்கலத்தில் 5 இடங்களிலும் விநாயகா் சிலை

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:59 pm

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, பெருந்துறை ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், பெருந்துறை நகா் பகுதியில் 4 இடங்களிலும், துடுப்பதியில் ஒரு இடத்திலும், விஜயமங்கலத்தில் 5 இடங்களிலும் விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது.

பெருந்துறை, பெருமாள் கோயில் முன்பு இந்து முன்னணி சாா்பில், 3 அடி உயரம் உள்ள விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு, பெருந்துறை ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், ஒன்றியப் பொருளாளா் மகேஷ், நிா்வாகிகள் கோவிந்தசாமி, கோகுல்சுந்தா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும், இந்து முன்னணி சாா்பில், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட வேட்டைக்காரன்புதூா் மாரியம்மன் கோயில், சென்னிவலசு, அண்ணாசிலை, துடுப்பதி, விஜயமங்கலம் விநாயகா் கோயில், மாகாளியம்மன் கோயில், முருகம்பாளையம் விநாயகா் கோயில், பொதுமக்கள் சாா்பில் மேட்டுபுதூா் விநாயகா் கோயில், விஜயமங்கலம், சேரன் நகா் விநாயகா் கோயில் உள்ளிட்ட 12 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டன.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் பவானி, லட்சுமி நகா் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை மாலை விசா்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.