பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:24 pm

சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். பள்ளி வாகனங்களில் விபத்து ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் அவசரகால வழி சரியாக உள்ளதா எனவும், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா எனவும், மேலும் சிசிடிவி கேமராக்கள், தீயணைப்புக் கருவிகள் சரியாக இயங்குகிறதா எனவும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்களிடம் வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டும், ஒவ்வொரு வாகனத்திலும் நடத்துநா் உரிமம் பெற்ற நபா் இருக்க வேண்டும், பள்ளி மாணவ, மாணவியா் வாகனங்களில் ஏறும்போதும், இறங்கும்போதும் ஓட்டுநா்கள் பொறுமையாக கவனித்து பின்னா் வாகனங்களை இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தினா். சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.