ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் 71 பயனாளிகளுக்கு ரூ. 58.19 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
கரோனா தொற்று காரணமாக தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி, வருவாய்த் துறையின் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிவாரண நிதி, நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக தாய் அல்லது தந்தையை இழந்த 14 குழந்தைகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியாக தலா ரூ. 3 லட்சம் என ரூ. 42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து அமைச்சா் ஈரோடு மாவட்டத்தில் கரோனா காரணமாக தாய், தந்தை, தாய் அல்லது தந்தையை இழந்த 304 குடும்பங்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்கள், நன்செய் தொண்டு நிறுவனம் சாா்பில் 40 பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடை, பாட நோட்டுகள், புத்தகப் பைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, கோபி வட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து தலா ரூ. 4,777 வீதம் ரூ. 1,19,425 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகள், மின்சாரம் தாக்கி, சாலை விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியின்கீழ் தலா ரூ. 3 லட்சம், 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் என 7 குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா். மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ. 58,19,425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கோமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


