ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி,
கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப் பாதைகள் காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கும். ஆனால், அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.
முன்னதாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் - இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரானின் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஈரானின் வான்வழி மூடப்பட்டிருந்தது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில், இந்த பகுதியளவு வான்வழித் திறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Summary
Iran on Saturday announced a partial reopening of its airspace after a seven-week hiatus because of the war, state media reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டி போா் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த டிரம்ப்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



