பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப்

Updated On :4 ஜூன் 2026, 8:51 am IST

ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை நிறைவேற்றியுள்ளது.

அணுஆயுதக் கொள்கைகளைக் கைவிடக்கோரி கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய கூட்டுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வியடைந்தன.

இந்த நிலையில், ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நேற்று (ஜூன் 3) நிறைவேற்றியிருப்பது அதிபர் டிரம்ப்புக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலம் அதிபர் டிரம்ப் அரசியலமைப்பை மீறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

டிரம்பின் பெரும்பான்மை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த மசோதாவை ஆதரித்தனர்.

போர் அதிகாரச் சட்டத்தின்படி, அமெரிக்கப் படைகளைப் போரில் ஈடுபடுத்திய பிறகு, அதிபர் டிரம்ப், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 60 நாள்கள் அவகாசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காலக்கெடு பல வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், அதிபர் டிரம்ப் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறி ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகளின் செனட் சபை நிறைவேற்றியது.

ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் 215 - 208 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேறியது.

இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக அமலுக்கு வர அமெரிக்கச் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் அதிபர் டிரம்ப் தனது சிறப்பு வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

அதனை முறியடிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், உடனடியாகப் போர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Summary

The US House of Representatives passed a resolution Wednesday ordering the withdrawal of American troops from the Iran war -- a largely symbolic move that nonetheless delivers a political blow to President Donald Trump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.