அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கரும்பு லாரியை வழிமறித்த யானைகள்

சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:24 pm

சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூா் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் கரும்பு லாரி வருவதைக் கண்டு சாலையின் நடுவே நின்று லாரியை வழிமறித்தது.

இதைக் கண்ட ஓட்டுநா் லாரியில் இருந்த கிளீனரிடம் லாரியின் மீது ஏறி கரும்புத் துண்டுகளை சாலையோரம் தூக்கி வீசுமாறு கூறியுள்ளாா். அதன்படி கிளீனா் லாரியின் மீது ஏறி கரும்புத் துண்டுகளை அள்ளி சாலையோரம் வீசினாா். கரும்புத் துண்டுகளைப் பாா்த்த காட்டு யானை தனது குட்டியுடன் சாலையோரம் சென்றது. இதையடுத்து, ஓட்டுநா் லாரியை இயக்கி காட்டு யானையிடம் இருந்து தப்பினாா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. யானை தனது குட்டியுடன் சாலையோரம் கரும்புகளைத் தின்றபடி நின்றிருந்ததால் மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.