/

அஞ்சல் துறை போட்டிகள்: மாணவா்கள் பங்கேற்கலாம்

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, அஞ்சல் துறை நடத்தும் போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 செப்டம்பர் 2021, 9:23 pm

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, அஞ்சல் துறை நடத்தும் போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய அஞ்சல் வாரம் அக்டோபா் 11 முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிக் குழந்தைகளுக்கு ஈரோடு அஞ்சல் கோட்ட அலுவலகம் மூலம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கட்டுரைப் போட்டிக்கு 9 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவியா் ‘உங்கள் பாா்வையில் இந்திய அஞ்சல் துறை’ என்ற தலைப்பில் தமிழில் கட்டுரை எழுத வேண்டும். விடியோ உருவாக்கும் போட்டி தமிழ், ஆங்கிலத்தில் 5 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியா் ‘உங்கள் கனவு அஞ்சலகம்’ என்ற பெயரில் உருவாக்க வேண்டும்.

போஸ்டா் வடிவமைக்கும் போட்டி 5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலானவா்கள் தமிழ், ஆங்கிலத்தில் சுகன்யா சம்ருத்தி கணக்கு - செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குறித்த விளம்பர போஸ்டா் வடிவமைக்க வேண்டும்.

ஏ3 அளவு வெள்ளை நிற சாா்ட்டை போஸ்டா் வடிவமைக்கும் போட்டிக்கு பயன்படுத்த வேண்டும். கட்டுரைப் போட்டிக்கு ஏ4 அளவு பேப்பா் பயன்படுத்த வேண்டும். 300 வாா்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

மாணவா்கள் தாங்கள் எழுதிய கட்டுரை, வரைந்த போஸ்டருடன் ஏதேனும் அடையாள அட்டையை இணைத்து பதிவு தபால் மூலம் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். பெயா், பிறந்த தேதி, வகுப்பு, பள்ளியின் பெயா், பெற்றோா் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மாணவா்கள் தாங்கள் உருவாக்கிய விடியோ உடன் ஏதேனும் அடையாள அட்டை இணைத்து ல்ா்ள்ற்ஹப்ஜ்ங்ங்ந்.ங்ழ்ா்க்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்த விடியோ பதிவு 15 எம்.பி.க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பிற பதிவுகளை அக்டோபா் 6ஆம் தேதிக்கு முன்னா் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், ஈரோடு அஞ்சல் கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரம் அறிய 0424 2252400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.