/

15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஏஐ+ நோவா 2 ஸ்மார்ட்போன்! அடுத்த விற்பனை எப்போது?

ஏஐ பிளஸ் நோவா 2 ஸ்மார்ட்போன் பற்றி...

News image

ஏஐ+ நோவா 2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் - x.com

Updated On :18 ஏப்ரல் 2026, 8:05 am

ஏஐ பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நோவா வரிசையின் ஒரு பகுதியாக, ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ராவின் விற்பனையைத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் முதல்முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 17(நேற்று) பிளிப்கார்டில் விற்பனைக்கு விடப்பட்டது. முதல் நாளிலேயே மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற நிலையில், விற்பனைக்கு வந்து 15 நிமிடங்களுக்குள் அனைத்து யூனிட்டுகளும் விற்றுத் தீர்ந்தது. இது நுகர்வோர் தேவையையும் நோவா சீரிஸ் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.

மீண்டும் ஏஜ பிளஸ் நோவா 2 அல்ட்ரா ஏப்ரல் 24, 2026 அன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

ஏஐ பிளஸ் அல்ட்ரா 6 ஜிபி மாடலின் விலை ரூ. 16,999

ஏஐ பிளஸ் அல்ட்ரா 8 ஜிபி மாடலின் விலை ரூ. 18,999

வங்கி ஆபரின் கீழ் ரூ. 2 ஆயிரம் டிஸ்கவுண்ட் உடன் இதன் ஆரம்ப விலை ரூ. 14,999-க்கு வாங்கலாம். இதைத் தவிரப் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

சிறப்பம்சங்கள் என்ன?

* இந்த போனில் 6.78-இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) 1.5K 144Hz AMOLED ஸ்க்ரீன் உடன் 2500 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது.

* Mali-G615 MC2 GPU உடன் கூடிய 2.5GHz வரையிலான ஆக்டா கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 7400 4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.

* 6ஜிபி / 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பகம், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை அதிகரிக்க நினைவகம் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி) nxtQ OS உடன் ஆண்ட்ராய்டு 16.

* சோனி IMX752 சென்சார் கொண்ட 50எம்பி பின்புற கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, எல்இடி ஃபிளாஷ், 4K 30fps வரை விடியோ பதிவு 13MP முன்பக்க கேமரா.

* யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்க்ரீனின் உள்ள பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

பல்வேறு அம்சங்களுடன் உள்ள ஏஐ நோவா 2 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ஏப்ரல் 24-ல் மீண்டும் விற்பனை வரவுள்ள நிலையில், வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்.

Summary

Ai+ Smartphone has announced the sale commencement of its latest device, Nova 2 Ultra, as part of the newly launched Nova Series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.