திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்களுக்கு பத்திரப் பதிவு இலவசம்! ராகுலின் 6 வாக்குறுதிகள்!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது பற்றி...

News image

ராகுல் காந்தி - congress

Updated On :18 ஏப்ரல் 2026, 1:24 pm IST

தமிழ்நாட்டில் பெரியாரின் கொள்கைகளை பாஜகவினர் அழிக்க நினைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும்பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 18) சென்னை வந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி,

"தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட, தமிழக மக்களுக்கு 6 முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறேன்.

இந்த மண்ணின் முதுகெலும்பாக இருக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முதல் அறிவிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகை,

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000,

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2,000 உதவித்தொகை,

உணவு பாதுகாப்புக்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 2,500,

300 நாள்களுக்குள் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். உள்ளூர் மக்களுக்கு குரூப் சி, டி பிரிவில் 60% பணியிடங்கள் நிரப்பப்படும்.

முதல்முறையாக சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப் பதிவு இலவசமாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை நுழையவிடாமல் இந்த தேர்தலின் மூலமாக நாம் தடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாஜகவினர் தீர்மானிக்க நினைக்கிறார்கள். தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

தமிழர்களான நீங்கள், வளர்ச்சியையும் சமூக நீதியையும் பெண்கள் பாதுகாப்பு என்ன என்பதையும் இந்தியாவுக்கே காட்டியிருக்கிறீர்கள். அதற்காக தமிழ்நாட்டுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

அதிமுகவினர் மோடி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக தாக்குதல்களை நிறுத்த வேண்டும். பெரியாரின் கொள்கைகளை அழிக்க நினைக்கிறார்கள். பெரியாரின் தத்துவங்களை நசுக்கப் பார்க்கிறார்கள், அவருடைய சமூக நீதிக் கொள்கைகளை அழிக்க பார்க்கிறார்கள். நான் எங்கு இருந்தாலும் தமிழ் மக்களுடன் இருப்பேன். தமிழ் மொழி, கலாசாரத்தைப் பாதுகாப்பதில் ராகுல் காந்தி என்றும் உடனிருப்பேன்.

முதலில் இது கொள்கைக்கான போர், பிறகுதான் அரசியல் போர். திமுக, காங்கிரஸ், பிற கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்" என்று கூறினார்.

Summary

Property Registration is Free for first time Women: Rahul gandhi 6 Promises to TN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.