ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாலை விபத்து: சிறுமி உள்பட இருவா் பலி

கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:40 pm

DIN

கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கோபி அருகே உள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் நவீன்ராஜ் (32), ஓட்டுநா்.இவரது மனைவி கயல்விழி (26), நண்பா் குப்புராஜ் என்பவரது மகள் வைஷாலி (8) ஆகிய மூவரும் கொடிவேரி அணையில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்றுள்ளனா்.

காசிபாளையம் காந்தி நகா் அருகே, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து வந்த காா், லாரியை முந்தி செல்வதற்கு முயன்றபோது நவீன்ராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், கயல்விழி, வைஷாலி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

படுகாயமடைந்த நவீன்ராஜை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.