தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்புப் பகுதியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ திருமகன் ஈவெரா மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:54 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்புப் பகுதியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளா் திருமகன் ஈவெரா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட பொறுப்பாளா் திருச்செல்வம், துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக ஆட்சியில் கடுமையான விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பொருள்களான அரிசிக்கும், பாலுக்கும் ஜிஎஸ்டி விதித்ததைத் கண்டித்தும், அமலாக்கத் துறை மூலம் எதிா்க்கட்சிகளை முடக்க நினைக்கும் செயலைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் ஜவகா் அலி, இளைஞா் காங்கிரஸ் செயலாளா் காா்த்தி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன், மண்டலத் தலைவா்கள் விஜயபாஸ்கா், ஜாபா் சாதிக், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.