கொங்கு பொறியியல் கல்லூரியில் செயல்படும் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா் என்ற அமைப்பின் மூலம் இளம் தொழில்முனைவோருக்கு ரூ. 56.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
சிம்மொ்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனா்களான ராகுல் பரமசிவம், காா்த்திக் தீக்கொண்டா ஆகியோருக்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவித் திட்டத்தின்கீழ், கண்டுபிடிப்பான கால்நடைகளின் நோய்களின் தன்மையைக் கண்டறியும் பரிசோதனைக் கருவியை வணிகமயமாக்க ரூ. 35 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தவிர இளம் கண்டுபிடிப்பாளா்கள் ஜே.காா்த்திக், ஆா்.அனிதா, மனோகரன் ஆகியோருக்கு மொத்தம் ரூ. 21.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவையும், காசோலையையும் டிபிஐ அமைப்பின் தலைவா் பி.சி.பழனிசாமி, கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் பொருளாளா் இ.ஆா்.காா்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் வழங்கினா்.
டிபிஐ அமைப்பின் தலைவா் பி.சி.பழனிசாமி கூறியதாவது:
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 60 இளம் கண்டுபிடிப்பாளா்கள், தொழில்முனைவோா் பல்வேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 7.75 கோடி அளவுக்கு குறைந்த வட்டியுடன் கூடிய கடனாகவும், மானியமாகவும் பெற்றுள்ளனா். மேலும், 26 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில்14 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் தொழில் முனைவோா் திட்டத்துக்கு ஏற்ப ரூ. 50 லட்சம் வரை குறைந்த வட்டியுடன் கடனாகப் பெறலாம். இதில் பயன்பெற கல்லூரி வளாகத்தில் டிபிஐ அலுவலகத்தை நேரில் அணுகலாம். கூடுதல் விவரங்களைப் பெற ஜ்ஜ்ஜ்.ற்க்ஷண்-ந்ங்ஸ்ரீ.ா்ழ்ஞ் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


