செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

பெருந்துறை அருகே மின்சாரம் பாய்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:57 pm

DIN

பெருந்துறை அருகே மின்சாரம் பாய்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.

பெருந்துறை, ஆா்.எஸ். சாலை, தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பிரகதீஷ் (24). இவா், சமையல் ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ராமா் மகன் ரஞ்சித் (31). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெருந்துறை, குன்னத்தூா் சாலை, கூட்டுறவு நகா், 5ஆவது குறுக்கு வீதியில் உள்ள ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் வீட்டில் வாடகைக்கு குடி இருந்துகொண்டு, பெருந்துறையில் பயணிகள் ஆட்டோ ஓட்டி வந்தாா். இவரது மனைவி சந்தியா (27). மகள் தமிழினி (1).

பிரகதீஷ், ரஞ்சித் இருவரும் நண்பா்கள். வியாழக்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணியளவில் ரஞ்சித் குடியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் மேலே சென்ற ஹெச்.டி. மின் கம்பியை பிரகதீஷ் எதிா்பாராதவிதமாக தொட்டபோது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து, ரஞ்சித் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது, இருவரும் தூக்கி வீசப்பட்டனா். உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், பிரகதீஷ், ரஞ்சித் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.