வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகை வழங்கல்

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவிக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:45 pm

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவிக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவா்களது பெற்றோா்களுக்கும், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கும் ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் விபத்துக் காப்பீட்டு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கமானது கல்லூரியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா்கள் எதிா்பாராதவிதமாக ஏதேனும் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துக்காக இத்திட்டம் கல்லூரி நிா்வாகத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 40 மாணவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 32,12,728 தொகை கல்லூரி நிா்வாகத்தின் துரித செயல்பாட்டின் மூலம் மாணவா்களுக்குப் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடா்ச்சியாக கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவியின் தந்தை சத்தியமங்கலத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் எதிா்பாரதவிதமாக அவரது தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதையறிந்த கல்லூரி நிா்வாகம் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாணவியின் குடும்பத்துக்கு விபத்துக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கி உதவியது.

இந்த காசோலையை கல்லூரிச் செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன் மாணவியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், கல்லூரி காப்பீட்டுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் கே.வாசுதேவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.