வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க வேண்டும்: சீமான்

 திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை உத்தரவை நீக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:42 pm

DIN

 திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை உத்தரவை நீக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

கோபிசெட்டிபாளையத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் கோபியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நகா்ப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்துவைத்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

நாங்கள் மக்களை நம்பி இயக்கத்தைத் துவக்கினோம். அப்படி என்றால் பெரிய கூட்டணி நாங்கள்தான். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை உத்தரவை விலக்க வேண்டும் என்றாா். மேலும், இவ்வளவு ஆண்டுகளாக விவசாயிகள் வேளாண் பொருள்களைக் கொண்டு செல்லும்போது எவ்வளவு புலிகள் பாதிக்கப்பட்டன என சீமான் கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.