மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி ஓட்டுநா் பலி
மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.


மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் சின்னகாளியூரைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவா் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையில் டிராக்டா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் இவா் கடந்த 19ஆம் தேதி ஊதியம் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சத்தி-அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் அருகே வளைவில் திரும்பும்போது, நிலை தடுமாறிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் படுகாயமடைந்தாா்.
பின்னா் அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முருகேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...