ஈரோடு: கடம்பூர் மலைப்பாதையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்
மேகமூட்டம் காரணமாக கடம்பூர் மலைப்பாதையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் 2 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் புறப்பட்டது.


மேகமூட்டம் காரணமாக கடம்பூர் மலைப்பாதையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் 2 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் புறப்பட்டது.
பெங்களூரில் இருந்து பரத் ஷீலா என்ற தம்பதியரை ஏற்றிக்கொண்டு கொச்சின் கோட்டக்குளம் மருத்துவமனைக்கு புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. ஹெலிகாப்படரை கேப்டன் ஜஸ்பால் இயக்கினார். பொறியாளர் அங்கித்சிங் உடன் வந்தார். கடம்பூர் மலைப்பகுதியில் கடுமையான மேகமூட்டம் காரணமாக கேட்டனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.
இதையும் படிக்க- புணேவில் மகன், மகள் கழுத்து நெரித்துக் கொலை: தாய் கைது
இதனால் ஹெலிகாப்படரை மேலும் இயக்க முடியாமல் கேப்டன் அத்தியூர் என்ற இடத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்த களத்தில் பத்திரமாக தரையிறக்கினார். ஹெலிகாப்டர் தரையிறங்கும் பகுதியில் சுற்றியதால் விழுந்துவிடுமோ என பயத்தில் மலைவாழ் மக்கள் சப்தமிடும் விடியோ வைரலாகி வருகிறது. தரையிறங்கிய ஹெலிகாப்டரில் கேப்டன் மற்றும் பொறியாளர் ஆகியோர் என்ஜினில் ஏதாவது கோளாறு ஏற்பட்டதா என ஆய்வு செய்தனர்.

நல்லநிலையில் இருப்பதையடுத்து மேகமூட்டம் நீக்கும் வரை அங்கேயே காத்திருந்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கியதை பார்த்த கடம்பூர் மக்கள் அங்கு சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அங்கு வந்த கடம்பூர் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் மேகமூட்டம் விலகி இயக்குவதற்கு சாதகமான வானிலை நிலவதியதால் மீண்டும் ஹெலிகாப்பட்ர் புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...