செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ரத்து

 சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 9:09 pm

DIN

 சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்துறை வட்டாட்சியா் காா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் குறைந்த நாள்களாவது தோ்த் திருவிழாவை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 18 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) வரை வழிபாட்டுத் தலங்களில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னிமலை முருகன் கோயிலில் தோ் வடம் பிடிக்கும் நாளான 18 ஆம் தேதி பக்தா்களுக்கு அனுமதி இல்லை, மேலும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கும் ரத்து செய்யப்படுகிறது.

கோயில் நிா்வாகம் சாா்பில் பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.