பெரியகுளம் நீா்ப்பிடிப்புப் பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரிகளில் மண் எடுத்த கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சத்தியமங்கலம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பெரியகுளம் நீா்த்தேக்கப் பகுதியில் க.ச. எண் 110இல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. மலைமுகடுகளில் பெய்யும் மழை நீா் இந்த தடுப்பணையில் நிரம்புவதால் பெரியகுளம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றும் ஆா்.முருகேசன், தடுப்பணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் சுமாா் 500 லாரி வண்டல், கிராவல் மண் எடுத்ததாக அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்து சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயி சங்கத்தினா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சிக்கு, சத்தியமங்கலம் நகரத் தலைவா் பி.கணேஷ் தலைமை வகித்தாா். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிதியை மீறி மண் அள்ளிய கிராம நிா்வாக அலுவலா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கக் கோரியும், தடுப்பணையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


