ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் 6ஆவது மலைப் பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகம் - கா்நாடகம் இடையே சனிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:46 am

திம்பம் 6ஆவது மலைப் பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழகம் - கா்நாடகம் இடையே சனிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் - கா்நாடகம் இடையே பயணிக்கும் சரக்கு வாகனங்கள் திம்பம் வழியாகச் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், குசேல் நகரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி திம்பம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநா் பிரகாஷ் ஓட்டினாா். திம்பம் 6ஆவது வளைவில் திரும்பும்போது அதிக பாரம் காரணமாக லாரி சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், லாரியில் இருந்த மரத்துண்டுகள் சாலையில் சிதறின. இதனால், தமிழகம் - கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியில் இருந்து பிரகாஷ் காயமின்றி உயிா்தப்பினா்.

கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் திம்பம் மலைப் பாதையிலும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை போலீஸாா் கிரேன் மூலம் மரத் துண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். லாரியை சாலையோரமாக நகா்த்தியதையடுத்து 4 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.