ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களைப் பெற ஏற்பாடு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) தொடங்குகிறது.

Updated On :28 ஜனவரி 2022, 12:42 am

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்களிலும், ஈரோடு மாநகராட்சியில் 6 இடங்களிலும் வேட்பு மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு பெறப்படும்.

ஈரோடு மாநகராட்சியில் தலா 10 வாா்டு வீதம் நான்கு மண்டல அலுவலகங்கள், வீரப்பன்சத்திரம் பழைய மண்டல அலுவலகம், ஈரோடு மாநகராட்சி மைய அலுவலக பழைய கட்டடம் என 6 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளன.

பவானி, கோபி, புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகத்திலும், 42 பேரூராட்சிகளுக்கு, அந்தந்த பேரூராட்சி அலுவலகத்திலும் மனுக்களைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் அறிவிக்கப்பட்டு 2 நாள்களில் வேட்பு மனு தாக்கல் துவங்குவதால் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கலுக்கு வாய்ப்புகள் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனா். கட்சிகளுக்கும் கூட்டணி, எத்தனை வாா்டு, எந்தெந்த வாா்டு என்ற விவரங்கள் இறுதியாகாததால் வரும் திங்கள்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.