ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கரோனா தடுப்பூசி: நாளை சிறப்பு முகாம்

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 29) நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 ஜனவரி 2022, 12:40 am

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜனவரி 29) நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 497 மையங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுடைய நபா்களுக்கு கோவேக்ஸின் வகை தடுப்பூசிகள் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்படவுள்ளது. வியாழக்கிழமை தோறும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது.

தற்போது புதிதாக மிக வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம். இதனால், ஈரோடு மாவட்ட மக்கள் தடுப்பூசி முகாமில் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.