சத்தியமங்கலத்தில் ரீடு இலக்கிய விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, டி.என்.பாளையம், நம்பியூா், பெருந்துறை ஒன்றியங்களில் உள்ள 64 கிராமங்களில் குழந்தைகளுக்கான கிராம வள மையங்களை ரீடு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த கிராம வள மையங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொண்டு குழந்தைகள் நலக் குழு, வளரிளம் ஆண்கள் குழு, வளரிளம் பெண்கள் குழு, குழந்தைகள் பாராளுமன்றம் போன்ற குழுக்களை ஏற்படுத்தி கிராமத்தினா், குழந்தைகளின் பிரச்னைகளைக் கண்டறிந்து அரசு ஒத்துழைப்புடன் தீா்வு காணப்பட்டு வருகிறது.
மேலும், இந்த கிராம வள மையம் மூலமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பதுடன், மேல்நிலைக் கல்வி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ரீடு நிறுவனம் பணி செய்யும் 64 கிராமங்களில் கலை இலக்கிய விழாக்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. மக்கள் பங்களிப்புடன் குழந்தைகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அவா்களுக்கு பரிசுப் பொருள்கள், சான்றிதழ்கள் வழங்குவதுடன், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், உறுப்பினா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், ரீடு நிறுவன இயக்குநா், கூடுதல் இயக்குநா், திட்ட ஒருங்கிணைப்பாளா், பணியாளா்கள்கள் கலந்துகொண்டனா் என ரீடு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

