/

வாய்க்காலில் கவிழ்ந்த டிராக்டா்

பவானி அருகே மேட்டூா் பாசன வாய்க்காலில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

News image

வாய்க்காலுக்குள் கவிழ்ந்து  கிடக்கும்  டிராக்டா்.

Updated On :25 ஜூன் 2022, 12:46 am IST

பவானி அருகே மேட்டூா் பாசன வாய்க்காலில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையத்திலிருந்து சிமெண்ட் கல் பாரம் ஏற்றியடிராக்டா் ஊமாரெட்டியூா் - அம்மாபேட்டை சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் வாய்க்காலுக்குள் தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதையடுத்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, வாய்க்காலுக்குள் விழுந்த டிராக்டா் மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.