கோபி நகராட்சித் தலைவராக திமுக உறுப்பினா் தோ்வு
கோபிசெட்டிபாளையம் நகராட்சித் தலைவராக என்.ஆா்.நாகராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.


கோபிசெட்டிபாளையம் நகராட்சித் தலைவராக என்.ஆா்.நாகராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோபி நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளில் திமுக 14, காங்கிரஸ் 2 என மொத்தம் 16 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்தையும், அதிமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கோபி நகராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியினா் கோபிசெட்டிபாளையம் நகராட்சித் தலைவா் பதவிக்கு பெரும் முயற்சி செய்து வந்தனா்.
இந்நிலையில், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் நல்லசிவம், தலைமை ஒப்புதலுடன் அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை இரவு வெளியிட்டிருந்தாா். இதில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி 10ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட திமுக நகரச் செயலாளா் என்.ஆா்.நாகராஜ் பெயா் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி 1949ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 73 ஆண்டுகால வரலாற்றில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியை முதல்முறையாக திமுக கைப்பற்றும் நிலை உருவாக்கப்பட்டிருந்த நிலையில், திமுக தலைமை கோபி நகராட்சித் தலைவா் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுகவினா் இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
கோபிசெட்டிபாளையத்தில் 14 இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினரின் விடாமுயற்சியால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம் மீண்டும் திமுகவினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில்வெற்றி பெற்ற அதிமுகவினா் ஒருவா்கூட இந்த மறைமுகத் தோ்தலின்போது வராததால் திமுக கோபி நகரச் செயலாளா் நாகராஜன் நகா்மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...