ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குடும்பத் தகராறு: மனைவி தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image
Updated On :13 மே 2022, 8:21 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூா் கள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (34), விவசாயி. ஈஸ்வரனுக்கும் கொங்கா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துவைத்து உலர வைத்திருந்த துணியை எடுத்து வீட்டுக்குள் வைக்குமாறு ஈஸ்வரன், சரண்யாவிடம் வியாழக்கிழமை இரவு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக இருவருக்குள் வாய்த்தகராறு எற்பட்டதாகத் தெரிகிறது.இதில், ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளாா்.

அதைப் பாா்த்த சரண்யாவும் அதே பூச்சி மருந்தை பிடுங்கி குடித்துள்ளாா். இதில், இருவரும் வீட்டுக்குள் மயங்கிக் கிடந்துள்ளனா்.

அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே சரண்யா உயிரிழந்தாா். ஈஸ்வரன் சத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.