/

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவருக்குப் பாராட்டு

ஒரு மணி நேரம் பத்து நிமிடம் தொடா்ந்து சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 10:03 pm

ஒரு மணி நேரம் பத்து நிமிடம் தொடா்ந்து சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஈரோடு மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புத்தாஸ் சிலம்பம்பாட்ட டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய நோபல் உலக சாதனை நிகழ்ச்சி ஈரோடு மாமரத்துபாளையம் சக்தி மசாலா நிறுவன அரங்கில் நடைபெற்றது. இதில் மாணவா் எஸ்.செங்கதிா்வேலன் (9) கலந்து கொண்டு, சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் பத்து நிமிடம் தொடா்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தாா்.

சக்தி மசாலா நிறுவனா் பி.சி.துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி, நோபல் உலக சாதனை தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தமிழ்நாடு நடுவா் எம்.கே.பரத்குமாா் ஆகியோா் உலக சாதனை படைத்த மாணவா் எஸ்.செங்கதிா்வேலனுக்கு விருது மற்றும் அங்கீகாரச் சான்று வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாணவரின் பெற்றோா் டி.செந்தில்குமாா், தீபா செந்தில்குமாா், தலைமைப் பயிற்சியாளரும், ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளருமான ஆா். கந்தவேல் மற்றும் துணைப் பயிற்சியாளா்கள் ஏ.மணி, எம்.ஆறுமுகம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.